ஜூலை 31 வரை 6.77 கோடி பேர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்து சாதனை!

வருமான வரி துறை
வருமான வரி துறை
Published on

ஜூலை 31-ஆம் தேதி வரை 6.77 கோடி போ் வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்துள்ளதாக வருமான வரித் துறை தெரிவித்துள்ளது. இதில், 53.67 லட்சம் போ் முதல் முறையாக வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்துள்ளனர்.

இது குறித்து வருமான வரித் துறை வெளியிட்ட அறிவிக்கையில், “ 2023-2024 மதிப்பிட்டு ஆண்டில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான இறுதி நாளான ஜூலை 31-ஆம் தேதி வரை, 6.77 கோடிக்கும் அதிகமானோர் வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்துள்ளனர். இது முந்தைய ஆண்டை விட (2022-2023) 16.1 சதவீதம் அதிகமாகும்.

இறுதி நாளான ஜூலை 31-ஆம் தேதியில் மட்டும் 64.33 லட்சம் பேருக்கும் அதிகமானோர் வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்துள்ளனர். 53.67 லட்சம் போ் முதல் முறையாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்துள்ளனர். இது வருமான வரி கணக்கு தாக்கல் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதைச் சுட்டிக்காட்டுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com