அடையார் ஆனந்த பவனில் அமெரிக்க கம்பெனி ரூ. 1600 கோடி முதலீடு!

அடையார் ஆனந்த பவன்
அடையார் ஆனந்த பவன்
Published on: 

தென்னிந்தியாவில் கடந்த 50 ஆண்டு காலமாக இயங்கி வரும் பிரபல சைவ உணவகமான அடையார் ஆனந்த பவனில், முதலீட்டு நிறுவனமான போதி ட்ரீ நிறுவனம் ரூ. 1600 கோடி முதலீடு செய்யவுள்ளது. அடையார் ஆனந்த பவனின் பெருபான்மையானப் பங்குகளை இந்நிறுவனம் வாங்குகிறது.

இந்தப் புதிய ஒப்பந்தத்தின் மூலமாக அடையார் ஆனந்த பவனின் தலைமை, திறமையை வலுப்படுத்தி, அதன் சமையல் துறையை நவீனமயமாக்க உள்ளதாக போதி ட்ரீயின் நிறுவனர்கள் ஜேம்ஸ் முர்டோக், உதய் சங்கர் தெரிவித்துள்ளனர்.

தற்போது, அடையார் ஆனந்த பவன் தென் மாநிலங்களான தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா ஆகிய இடங்களில் 160 விற்பனையகங்களுடனும், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், மலேசியா ஆகிய இடங்களுடன் உலகளவில் 30 விற்பனையகங்களும் செயல்பட்டு வருகின்றன.

இந்த ஒப்பந்தம் அடையார் ஆனந்த பவனின் உணவு வகைகளை இந்தியா, சர்வதேசச் சந்தைகளிலும் விரிவுப்படுத்தும் என்று கூறப்படுகிறது.

போதி ட்ரீ நிறுவனத்துடன் அடுத்த அத்தியாயத்தைத் தொடங்குவதில் மகிழ்ச்சியடைவதாக அடையார் ஆனந்த பவனின் இணை நிறுவனர் கே.டி. சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram