கார்கள்
கார்கள்

ஏப்ரலில் 3,35,629 கார்கள் விற்பனை- 1.3% அதிகரிப்பு!

பயணியர் வாகனமான கார்களின் விற்பனை நாடளவில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமாகப் பதிவாகியிருக்கிறது. 

தனி நபர் பயணியர் வாகனங்களின் தேவையும் விற்பனையும் அகில இந்திய அளவில் கூடிக்கொண்டே போகிறது. இதன் தொடர்ச்சியாக கடந்த மாதத்தில் 3 இலட்சத்து 35 ஆயிரத்து 629 கார்கள் விற்பனை ஆகியுள்ளன. 

கடந்த ஆண்டு இதே 3 இலட்சத்து 31 ஆயிரத்து 278 கார்கள் விற்பனை ஆகியுள்ளன. 

சரக்கு வாகனங்கள் உட்பட்ட பயன்பாட்டு வாகனங்களைப் பொறுத்தவரை, 21 சதவீத அளவுக்கு விற்பனை அதிகரித்துள்ளது. 

பயன்பாட்டு வாகனங்களின் விற்பனை கடந்த மாதம் ஏப்ரலில் ஒரு இலட்சத்து 79 ஆயிரத்து 329ஆக அதிகரித்துள்ளது. இதுவே சென்ற ஆண்டில் இதே மாதத்தில் ஒரு இலட்சத்து 48 ஆயிரத்து 5 வண்டிகள் விற்கப்பட்டுள்ளன. 

இந்திய தானியங்கி வாகன உற்பத்தியாளர் சங்கமான சியாம் இத்தகவலைத் தெரிவித்துள்ளது.   

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com