வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர்
வணிகம்
வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ. 203 உயர்வு!
வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.203 இன்று உயர்த்தப்பட்டுள்ளது.
சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் அவ்வபோது மாற்றியமைத்து வருகின்றன. அந்தவகையில், கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி 99.75 ரூபாயும், செப்டம்பர் 1ஆம் தேதி 158 ரூபாயும் குறைக்கப்பட்டது.
இந்த நிலையில், மாதத்தின் முதல்நாளான இன்று வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன. அதன்படி ரூ.203 உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டு சமையல் எரிவாயு சிலிண்டர் ரூ.1,898-ஆக விற்பனை செய்யப்படுகிறது.
வீட்டுப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு உருளை விலை மாற்றமின்றி ரூ.918-க்கு விற்பனையாகிறது.