வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!

வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர்
வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர்
Published on

சென்னையில் வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ. 26.50 உயர்ந்துள்ளது.

சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் அவ்வபோது மாற்றியமைத்து வருகின்றன. அந்த வகையில் மாதத்தின் முதல் நாளான இன்று வணிகப் பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன.

அதன்படி, சென்னையில் ரூ.1,942-க்கு விற்கப்பட்ட சிலிண்டர், ரூ. 26.50 உயர்ந்து ரூ. 1,968.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்று நள்ளிரவு முதல் இது அமலுக்கு வருகிறது.

டெல்லியில் ரூ. 1,796.50-க்கும் மும்பையில் ரூ.1,749-க்கும் கொல்கத்தாவில் ரூ. 1,908-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வணிக சிலிண்டர் விலை கடந்த அக்டோபரில் உயர்த்தப்பட்ட நிலையில் நவம்பரில் குறைக்கப்பட்டது. இதையடுத்து டிசம்பரில் மீண்டும் உயர்ந்துள்ளது.

சிலிண்டர் விலை எந்த மாற்றமுமின்றி ரூ. 918.50-க்கு விற்பனையாகிறது.

logo
Andhimazhai
www.andhimazhai.com