இணைய வணிகச் சந்தையில் இன்று பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கூகுள் நிறுவனம்.
பிரபல இணைய வர்த்தக நிறுவனமான பிளிப்கார்ட்டில் 350 மில்லியன் அமெரிக்க டாலர் அதாவது சுமார் 2,907 கோடி ரூபாயை கூகுள் நிறுவனம் இன்று முதலீடு செய்தது. இது பிளிப்கார்ட்டின் ஒரு பில்லியன் டாலர் திரட்டும் அண்மைய அறிவிப்பின்படி, ஒரு சிறு முதலீடு ஆகும். முன்னதாக, வால்மார்ட் சார்பில் 600 பில்லியன் டாலர் முதலீடு செய்யப்பட்டது.
விரைவு வர்த்தகப் போட்டியில் சொமேட்டோவின் பிளிங்கிட், ஸ்விக்கியின் இன்ஸ்டாமார்ட், செப்டோ ஆகியவற்றுக்குப் போட்டியாக பிளிப்கார்ட் செயல்பட்டாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில்தான் முதலீட்டை ஈர்க்கும் முயற்சியில் அது இறங்கியுள்ளது.
மேலும், பிளிப்கார்ட் நிறுவனமானது அதன் வருவாய் வழிகளைப் பெருக்குவதிலும் தீவிரம் காட்டிவருகிறது. அதன்படி நிதித் தொழில்நுட்பத்திலும் இறங்கியுள்ள பிளிப்கார்ட், யுபிஐ பணம்செலுத்தல் தொழிலிலும் ஈடுபடத் தொடங்கியது.
கடந்த மார்ச் மாதத்தில் மட்டும், பிளிப்கார்ட்டின் யுபிஐதளத்தில் 197.24 கோடி ரூபாய்க்கு 50 இலட்சம் பரிவர்த்தனைகள் செய்யப்பட்டுள்ளன. மற்ற எல்லா புது நுழைவு நிறுவனங்களைப் போலவே, பிளிப்கார்ட்டுக்கும் வாடிக்கையாளர்களைக் கவர்ந்திழுக்கவும் தக்கவைக்கவும் கணிசமான நிதி தேவை என்பது குறிப்பிடத்தக்கது.