97.6 பில்லியன் டாலர் சொத்து- அம்பானியை முந்தி அதானி முதலிடம்!

97.6 பில்லியன் டாலர் சொத்து- அம்பானியை முந்தி அதானி முதலிடம்!

இந்தியாவிலேயே 97.6 பில்லியன் டாலர் சொத்துடன் செல்வந்தர் பட்டியலில் முதலாம் இடத்தில் வந்திருக்கிறார், கௌதம் அதானி. 97 பில்லியன் டாலர் சொத்து உடைய அம்பானி குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானியை இவர் பின்னுக்குத் தள்ளிவிட்டார்.

இத்துடன் உலகத்திலேயே 12ஆவது செல்வந்தர் என்ற இடத்தையும் அதானி பிடித்திருக்கிறார் என்று புளூம்பெர்க் செல்வந்தர் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதானி குழுமத்தின் பங்குகள் தொடர்ச்சியாக அதிகரித்ததன் பலனாக, அவரின் சொத்து மதிப்பில் 7.67 பில்லியன் டாலர் அளவுக்கு கூடியுள்ள நிலையில், இந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com