வணிகம்
தங்கம் வெள்ளி விலை நாளுக்கு நாள் உயர்ந்து வரும் நிலையில் இன்றும் விலை அதிகரித்துள்ளது.
இன்று (ஜனவரி 7) ஒரு கிராம் 22 கேரட் தங்கத்தின் விலை ரூ.40 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 12,830-க்கும், ஒரு சவரனுக்கு ரூ.320 உயர்ந்து சவரன் ரூ. 1,02,960-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலை ஒரே நாளில் கிராமுக்கு ரூ.12 உயர்ந்து ரூ.283 க்கும், கிலோவுக்கு ரூ.12,000 உயர்ந்து ஒரு கிலோ ரூ. 2,83,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் ஜனவரி 2ஆம் தேதியிலிருந்து இன்று வரை ஒரு கிராம் தங்கம் 430 ரூபாய் விலை உயர்வு கண்டிருக்கிறது. ஒரு சவரன் விலை 3,440 ரூபாய் உயர்ந்திருக்கிறது.
5ஆவது நாளாக தங்கம் வெள்ளி விலை உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.