அதிரடியாக குறைந்த தங்கம் விலை… பவுனுக்கு ரூ.1,320 குறைவு!

gold rate
தங்கம் விலை (மாதிரிப்படம்)
Published on: 

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.1,320 என அதிரடியாக குறைந்துள்ளது. இதனால் ஒரு பவுன் தற்போது ரூ. 57,600-க்கு விற்பனையாகி வருகிறது.

தங்கம் விலை தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகிறது. கடந்த வாரம் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில் தங்கத்துக்கான மதிப்பு ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்தது. இந்நிலையில், இன்று காலை தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்துள்ளது.

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் பவுனுக்கு ரூ.1,320 என குறைந்துள்ளது. இதனால் ஒரு பவுன் ரூ.57,600-க்கு விற்பனை ஆகிறது. தங்கம் கிராமுக்கு ரூ.165 குறைந்து ரூ.7,200-க்கு விற்பனையாகிறது. நேற்றைய தினம் பவுனுக்கு ரூ.80 என அதிகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளின் எதிரொலியால் கூட தங்கம் விலை சரிந்திருக்கலாம் என வணிக துறை சார்ந்த வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 குறைந்து ஒரு கிலோ ரூ.1,02,000-க்கு விற்பனை ஆகிறது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram

logo
Andhimazhai
www.andhimazhai.com