வணிகம்
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், இன்று சவரனுக்கு ரூ.360 அதிகரித்து ரூ.49,200-க்கு விற்பனையாகிறது.
தங்கத்தின் விலை கடந்த ஆண்டு மார்ச் மாதத் தொடக்கம் முதலே ஏற்ற இறக்கத்தோடு காணப்படுகிறது. நேற்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்த நிலையில், இன்று மேலும் உயர்ந்துள்ளது.
சென்னையில் தங்கம் சவரனுக்கு இன்று ரூ.360 உயர்ந்து ரூ.49,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் கிராமுக்கு ரூ.45 உயர்ந்து ரூ.6,150-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கடந்த 5 நாள்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,760 உயர்ந்துள்ளது.
இதைப் போல, வெள்ளியின் விலை கிராமுக்கு 20 காசு உயர்ந்து ரூ.79.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது.