குறைந்த தங்கம் விலை… இன்றைய நிலவரம் என்ன?

gold rate
தங்கம் விலை (மாதிரிப்படம்)
Published on: 

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ. 560 குறைந்து ரூ. 59,080க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த வார இறுதியில் இருந்து தொடர்ந்து அதிகரித்த வந்த தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ. 520 அதிகரித்து ஒரு சவரன் ரூ. 59,640க்கும், ஒரு கிராம் ரூ. 7,455க்கும் விற்பனை செய்யப்பட்டது.

தங்கத்தின் விலை இன்றைய நிலவரப்படி, சவரனுக்கு ரூ. 560 குறைந்து ரூ. 59,080க்கும், கிராமுக்கு ரூ. 70 குறைந்து ரூ. 7,385க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் கடந்த 2 நாள்களாக வெள்ளியின் விலை மாற்றமின்றி விற்கப்பட்ட நிலையில், இன்று கிராமுக்கு ரூ. 3 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.106க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 1,06,000க்கும் விற்பனையாகிறது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram

logo
Andhimazhai
www.andhimazhai.com