ஜெட் வேகத்தில் உயரும் தங்கம் விலை.… விழிபிதுங்கும் மக்கள்!

gold rate
தங்கம் விலை (மாதிரிப்படம்)
Published on

வரலாற்றில் முதல்முறையாக ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.11,300-ஐ கடந்தது. ஒரு சவரன் ரூ.90,400-ஐ கடந்து புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. விரைவில் பவுன் ரூ. 1 லட்சத்தை கடக்கும் என நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனா்.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.800 உயா்ந்து ரூ.90,400-க்கு விற்பனையாகிறது.

அமெரிக்காவின் வர்த்தக போரால் அந்நாட்டு டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்துவருகிறது. இதனால் பங்குச்சந்தைகளில் முதலீடு செய்வது கணிசமாக குறைந்து, தங்கத்தின் மீதான முதலீட்டை அதிகரித்துள்ளது. இதனால் தங்கத்தின் விலை நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக மின்னல் வேகத்தில் உயர்ந்து வருகிறது.

இந்த நிலையில் தங்கத்தின் விலை திங்கள்கிழமை சவரனுக்கு ரூ.1,400 உயா்ந்து ரூ.89,000-க்கு விற்பனையானது.

தொடா்ந்து செவ்வாய்க்கிழமை மீண்டும் சவரனுக்கு ரூ.600 உயா்ந்து ரூ.89,600-க்கும் விற்பனையானது.

இந்நிலையில், தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 மீண்டும் உயா்ந்துள்ளது நடுத்தர மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதன்படி, கிராமுக்கு ரூ.100 உயா்ந்து ரூ.11,300-க்கும், சவரனுக்கு ரூ.800 உயா்ந்து ரூ.90,400-க்கும் விற்பனையாகிறது. எனினும், வெள்ளி விலை மாற்றமின்றி கிராம் ரூ.167-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.1,67,000-க்கும் விற்பனையாகிறது.

கடந்த 50 ஆண்டுகளில் ஆபரணத் தங்கம் விலை கடந்து வந்த பாதை (ஒரு சவரன் விலை)

ஆண்டு - விலை

1975 - ரூ.432

1980 - ரூ. 1,136

1985 - ரூ. 1,544

1995 - ரூ. 3,600

2000 - ரூ. 3,480

2005 - ரூ. 4,640

2010 - ரூ. 15,448

2015 - ரூ. 18,952

2020 - ரூ. 37,792

2021 - ரூ. 36,152

2022 - ரூ. 41,040

2023 (டிச.31) - ரூ. 47,280

2024 (மாா்ச் 5) - ரூ. 48,120

2025 (அக்.8) - ரூ.90,400

logo
Andhimazhai
www.andhimazhai.com