புத்தாண்டு முதல் நாளே குறைந்த தங்கம் விலை!

gold rate
தங்கம் (மாதிரிப்படம்)
Published on

புத்தாண்டின் முதல் நாளான இன்று (ஜனவரி 1) ஒரு சவரன் தங்கம் ரூ.320 வரை குறைந்து ரூ.99,520க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச சந்தை நிலவரம், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு, போர்ப்பதற்றங்கள், உலக அளவிலான தங்கத்தின் தேவை, உலக நாடுகளின் மத்திய வங்கிகளின் வரி விகிதங்கள் உள்ளிட்ட பல காரணங்களால் தங்கம் மற்றும் வெள்ளி விலை அவ்வப்போது ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. இதில் கடந்த 2025ஆம் ஆண்டு தங்கம் மற்றும் வெள்ளி விலை வரலாற்றில் புதிய உச்சத்தை தொட்டது. ஒரு சவரன் தங்கம் ரூ.1 லட்சத்தை தாண்டியது நடுத்தர வர்க்கத்தினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதேபோல் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.285 வரை சென்றது.

இந்நிலையில் 202ஆ6ம் ஆண்டும் தங்கத்தின் விலை தொடர்ந்து உயரும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இன்று ஒரு கிராம் தங்கம் ரூ. 40 வரை குறைந்துள்ளது.

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.40 குறைந்து ரூ.12,440க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.320 குறைந்து ரூ.99,520க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோல் 18 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.35 குறைந்து ரூ.10,375க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.1 குறைந்து ரூ.256க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.1000 குறைந்து ரூ.2,56,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

logo
Andhimazhai
www.andhimazhai.com