தங்கம்
தங்கம்

தங்கத்தின் விலை ரூ. 51,120ஆக உயர்வு- ஒரே நாளில் 1,120 ரூபாய் அதிகம்!

அணிகலன் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு நேற்று 50ஆயிரம் ரூபாயைத் தொட்டது.

சில வாரங்களாக 50 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாக நீடித்துவந்த நிலையில், முதல் முறையாக மார்ச்28ஆம் தேதியான நேற்று சவரன் தங்கம் ஐம்பதாயிரம் ரூபாய்க்கு விற்பனையானது. 

அதைத் தொடர்ந்து, இன்று சென்னை தங்கச் சந்தையில் அணிகலன் தங்கத்தின் விலை சவரனுக்கு 51, 120 ரூபாயாக உயர்ந்தது.

அதாவது ஒரே நாளில் 1,120 ரூபாய் அளவுக்கு தங்கத்தின் விலை ஏறியுள்ளதால், பொருளாதார வல்லுநர்கள் தங்க சந்தையை உற்றுநோக்கி வருகின்றனர்.  

logo
Andhimazhai
www.andhimazhai.com