தங்கத்தின் புதிய உச்ச விலை ரூ. 52 ஆயிரம்!

தங்கம்
தங்கம்
Published on: 

தங்கத்தின் விலை அதிகரித்துக்கொண்டே செல்லும் நிலையில், கடந்த வாரம் முதல் முதலாக 50ஆயிரம் ரூபாயைத் தொட்டது. அதைத் தொடர்ந்து தங்கத்தின் விலை ஏறுமுகமாகவே இருந்துவருகிறது. 

சென்னையில் இன்று ஒரு சவரன் அணிகலன் தங்கத்தின் 52 ஆயிரம் ரூபாயைத் தொட்டது. 

ஒரு கிராம் அணிகலன் தங்கத்தின் விலை ரூ.6,500ஆக அதிகரித்தது. 

வெள்ளியின் விலை கிராமுக்கு 2 ரூபாய் அதிகரித்து, ஒரு கி.கி. வெள்ளி 84 ஆயிரம் ரூபாயாக ஆனது. 

உலக அளவில் முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீதே கண் வைத்திருப்பதால், தங்கச் சந்தையில் தொடர்ந்து விலை அதிகரித்தபடியே இருக்கிறது. இப்போதைக்கு இது குறைவதற்கான வாய்ப்பு இல்லை என்கிறார்கள், தங்க வர்த்தக அமைப்பினர். 

எல்லா தரப்பு மக்களின் சேமிப்பாக இருந்துவரும் தங்கம், இப்படி விலை உயர்ந்துகொண்டே போவதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.  

logo
Andhimazhai
www.andhimazhai.com