அதிரடியாக குறைந்த தங்கத்தின் விலை... இன்றைய நிலவரம் என்ன?
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ. 560 குறைந்துள்ளது.
கடந்த மாதம் 23 ஆம் தேதி மத்திய பட்ஜெட்டில் தங்கம், வைரம் உள்ளிட்டவைகளின் மீதான சுங்க வரி குறைக்கப்பட்டது. இதனால் தங்கத்தின் விலை படிப்படியாகக் குறைந்து வந்தாலும் இடையிடையே அதிகரிக்கவும் செய்கிறது.
கடந்த வார இறுதியில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ. 51,600-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், நேற்று மேலும் ரூ. 160 அதிகரித்து ஒரு சவரன் ரூ. 51,760-க்கு விற்பனையானது.
இந்த நிலையில், சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 560 குறைந்து ஒரு சவரன் ரூ.51,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராமுக்கு ரூ. 70 குறைந்து ரூ. 6400-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ. 4 அதிரடியாக குறைந்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் ரூ. 87-க்கும் ஒரு கிலோ ரூ. 87000-க்கு இன்று விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.