டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு தொடர் வீழ்ச்சி!

டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு தொடர் வீழ்ச்சி!
Published on

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று காலை ரூ. 94 ரூபார் 50 காசுகளாக சரிந்துள்ளது.

கடந்த வாரம் வெள்ளிக்கிழமை வர்த்தக நேரம் முடிவடையும் போது டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ. 94.78 என்ற புதிய உச்சத்தை தொட்டது.

வாரத்தின் முதல் நாளான இன்று காலை வர்த்தகம் தொடங்கியவுடன் ஏற்ற இறக்கத்துடன் இருக்கின்றது. குறைந்தபட்சம் ரூ. 93.5 வரை வர்த்தகமானது.

பகல் 11.50 நிலவரப்படி டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ. 94.66 ஆக உள்ளது.

மேற்கு ஆசிய போர் காரணமாக ஏற்பட்டிருக்கும் நிச்சயமற்ற தன்மைகளுக்கு மத்தியில் ஏற்பட்ட வெளிநாட்டு நிதி வெளியேற்றம், இந்திய ரூபாயின் சரிவுக்கு முக்கிய காரணமாக அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

logo
Andhimazhai
www.andhimazhai.com