ஏர்டெல்லின் அறிவிப்பு- தாளித்து எடுக்கும் வலைவாசிகள்!

ஜியோ, ஏர்டெல், விஐ
ஜியோ, ஏர்டெல், விஐ
Published on: 

டிராயின் உத்தரவுப்படி இணையத் தரவுக் கட்டணம் இல்லாமல் மூன்று புதிய அறிவிப்புகளை ஏர்டெல் நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. அதாவது, பேசவும் சாதாரணமான குறுந்தகவல் அனுப்பவும் மட்டுமான விலைத் தொகுப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

ரூ.185, ரூ.203, ரூ.206 என அறிவிக்கப்பட்டுள்ள மூன்று விலைத்தொகுப்புகளுமே டேட்டா இல்லாதவைதான். ஆனாலும் இவற்றைவிடக் குறைவாக பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல். 150 ரூபாய்க்கும் குறைவாகவே டேட்டா வசதியுடன் அளவில்லாப் பேசும்வசதியை வழங்குகிறது என்பதைக் குறிப்பிட்டு சமூக ஊடகங்களில் பலரும் விமர்சிக்கின்றனர். 

அத்துடன் ஏற்கெனவே ஏர்டெல் நிறுவனமே பத்து ரூபாய் கூடுதலாக டேட்டாவையும் கொடுத்தது. இப்போது வெறும் பத்து ரூபாயைக் குறைத்துவிட்டு ஏதோ பெரிய சலுகையைத் தந்ததைப் போல பெருமிதப்பட்டுக்கொள்வதா என்றும் இன்னொரு தரப்பினர் குறைபட்டுக்கொண்டுள்ளனர். 

இந்த விலைத்தொகுப்பு டிராய் அறிவித்தபடி முப்பது நாள்களுக்கும் செல்லுபடியாகுமா அல்லது 28 நாள்களுக்குத்தானா என்கிற குரலும் எழாமல் இல்லை. 

டிராய் அறிவித்ததை ஏற்றுக்கொண்ட முதல் நிறுவனம் எனச் சொல்லிக்கொண்டால் மட்டும் போதுமா? அதை உரியபடி செயலில் காட்டவேண்டாமா எனப் பொங்கவும் செய்கிறார்கள், வலைவாசிகள். 

முன்னதாக, கடந்த மாதம் டிராய் விதித்த உத்தரவில், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் எல்லாமே டேட்டா இல்லாத விலைத்தொகுப்பை குறைந்த கட்டணத்துக்கு மாதம் முழுக்கக் கிடைக்கும்படி செய்வது வரும் நவம்பர் முதல் கட்டாயம் என அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

logo
Andhimazhai
www.andhimazhai.com