புதிய தொழில் கொள்கை- விஜய் அரசு முடிவு!

புதிய தொழில் கொள்கை- விஜய் அரசு முடிவு!
Published on

தற்கால, வருங்காலத் தேவைகளைக் கருத்தில்கொண்டு த.வெ.க. அரசாங்கம் புதிய தொழில் கொள்கையை உருவாக்கும் என ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே சமயம், முந்தைய தொழில் கொள்கைகளும் பேணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

”உள்நாட்டு, உலக நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய சிறப்பு ஊக்கத்தொகைத் திட்டங்களை இந்த அரசாங்கம் செயல்படுத்தும். அனைத்துத் துறைகளுக்கும் பொருந்தக்கூடிய வகையில், ஒற்றைச்சாளர முறையை முழுமையான டிஜிட்டல் தளமாக மேம்படுத்தி, எந்தவித நிர்வாகத் தாமதமும் இல்லாமல் அனைத்து அனுமதிகளையும் விரைந்து வழங்கி, தொழில் தொடங்குவதை எளிதாக்கும் சூழலை அரசு மேம்படுத்தும்.

மேலும், பன்னாட்டு நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்க்கும்வகையில் தமிழ்நாடு முதலீட்டாளர் ஊக்குவிப்பு ஆணையம் ஒன்று தலைமைச் செயலாளர் தலைமையில் ஏற்படுத்தப்படும். அதன் மூலம், ரூ.200 கோடிக்கும் மேல் முதலீடு செய்யும் அல்லது 5 ஆயிரம் பேருக்கு வேலை வழங்கும் நிறுவனங்களுக்கு விரைந்து தொழில் தொடங்க அனுமதியளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.” என்றும் கூறப்பட்டுள்ளது.

மாநிலத்தின் இயற்கை வளத்தையும் சுற்றுச்சூழல் சமநிலையையும் பேணிக்காக்க விரிவான நிலையான சுற்றுச்சூழல் கொள்கை உருவாக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com