சக்திகாந்த தாஸ்
சக்திகாந்த தாஸ்

சிறந்த வங்கித் தலைவர் தரவரிசையில் சக்திகாந்த தாஸ்; பிரதமர் வாழ்த்து!

உலக அளவில் சிறந்த மத்திய வங்கித் தலைவர்களின் பட்டியலில், இந்திய ரிசா்வ் வங்கி ஆளுநா் சக்திகாந்த தாஸ் முதலிடம் பெற்றுள்ளார்.

அமெரிக்காவைச் சோ்ந்த ‘குளோபல் ஃபைனான்ஸ்’ என்ற நிதி விவகாரங்கள் சார்ந்த இதழ், சிறந்த மத்திய வங்கித் தலைவர்களின் பட்டியலை 1994ஆம் ஆண்டு முதல் இந்த தரவரிசைப் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்தவகையில், நடப்பாண்டுக்கான தரவரிசையை வெளியிட்டுள்ளது.

பணவீக்கத்தை கட்டுப்படுத்துதல், பொருளாதார வளர்ச்சி இலக்குகள், செலாவணி ஸ்திரத்தன்மை, வட்டி விகித மேலாண்மை உள்ளிட்ட நடவடிக்கைகளில், தங்களது உத்திகளின் மூலம் அடைந்த வெற்றியின் அடிப்படையில் மத்திய வங்கித் தலைவர்கள் தரவரிசைபடுத்தப்பட்டுள்ளனா்.

இப்பட்டியலில், மிகச் சிறந்த செயல்பாட்டுக்கான ‘ஏ பிளஸ்’ என்ற முதன்மையான பிரிவில் ஆா்பிஐ ஆளுநர் சக்திகாந்த தாஸ் இடம்பெற்றுள்ளார்.

சக்திகாந்த தாஸூக்கு வாழ்த்து தெரிவித்து ட்விட் செய்துள்ள பிரதமர் மோடி, ”உலக அரங்கில் நாட்டின் நிதி தலைவர் அங்கீகரிக்கப்பட்டிருப்பது, பெருமையான தருணம். அவருடைய அர்ப்பணிப்பும் தொலைநோக்கு பார்வையும் நமது நாட்டின் வளர்ச்சிப் பாதையை தொடர்ந்து வலுப்படுத்துகிறது.” என்று பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com