'வங்கிகளுக்கான குறுகிய காலக் கடனுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை. 6.5 சதவீதம் ஆகவே தொடரும்' என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார்.
ரெப்போ விகிதம் என்பது மற்ற வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அளிக்கும் கடனுக்கான வட்டி விகிதம் ஆகும். இந்த ரெப்போ வட்டி விகிதத்தில், 11வது முறையாக மாற்றம் செய்யப்படவில்லை. இது குறித்து மும்பையில் நிருபர்கள் சந்திப்பில் சக்திகாந்த தாஸ் கூறியதாவது:
வங்கிகளுக்கான குறுகிய காலக் கடனுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை. 6.5 சதவீதம் ஆகவே தொடரும். 11வது முறையாக மாற்றம் செய்யப்படவில்லை. பணவீக்க விகிதம் உயர்வு, பொருளாதார வளர்ச்சி குறைந்தது போன்ற காரணங்களால் வட்டி மாற்றமில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
2023ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி மாற்றாமல் 6.5 சதவீதமாகவே வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.