தமிழ்நாட்டில் கடந்த மூன்று ஆண்டுகளில் 6 ஆயிரத்து 384 புத்தாக்கத் தொழில் நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
அரசுசார்பிலான அறிக்கை ஒன்றில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2021ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் பதிவுசெய்யப்பட்டிருந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் 2,032. இன்றைய நிலவரப்படி அதுவே நான்கு மடங்கு அதிகரித்து, ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 8,416 ஆக உயர்ந்துள்ளது.
குறிப்பாக, பெண்கள் தொடங்கியுள்ள ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை இதே காலகட்டத்தில் 966-இலிருந்து 3,163ஆக அதிகரித்திருக்கிறது.
தமிழ்நாடு புதுத்தொழில் ஆதார நிதி திட்டத்தின்படி தொடக்க நிலையில் உள்ள ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு தலா 10 இலட்சம் ரூபாய் வீதம் இதுவரை 132 நிறுவனங்களுக்கு 13.95 கோடி ரூபாய் அளிக்கப்பட்டுள்ளது. இத்துடன் அந்த நிறுவனங்கள் பல்வேறு முதலீட்டு நிதியங்களின் மூலம் 314.3 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடுகளைத் திரட்டியுள்ளன.
அரசின் நேரடி முதலீடு பெற்ற புத்தாக்கத் தொழில் நிறுவனங்களின் மூலம் 1,913 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.