அடுத்த 3 மாதங்களில் ரூ. 37,000 கோடி கடன் பெற தமிழக அரசு திட்டம்!

அடுத்த 3 மாதங்களில் ரூ. 37,000 கோடி கடன் பெற தமிழக அரசு திட்டம்!

தமிழக அரசு அடுத்த மூன்று மாதங்களில், கடன் பத்திரங்கள் வழியாக, 37,000 கோடி ரூபாய் கடன் பெற திட்டமிட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி வெளியிட்ட தகவலின் அடிப்படையில் தெரியவந்துள்ளது.

அதிக கடன் வாங்கும் மாநிலங்களில் தமிழகம் கடந்த சில ஆண்டுகளாக முதலிடத்தில் இருந்து வருகிறது.

தமிழக அரசின் கடன் கடந்த ஆண்டு 6.53 லட்சம் கோடியாக இருந்த நிலையில், 2024 மார்ச் 31ஆம் தேதி, தமிழக அரசின் கடன் 7.26 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டிருந்து. ஆனால், தமிழக அரசின் கடன் 7.53 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், தமிழக அரசு அடுத்த மூன்று மாதங்களில், கடன் பத்திரங்கள் வாயிலாக, 37,000 கோடி ரூபாய் கடன் பெற, ரிசர்வ் வங்கியிடம் அனுமதி பெற்றுள்ளது. இவ்விபரத்தை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.

கடந்த இரண்டு நிதியாண்டுகளில், தமிழக அரசு கடன் பத்திரங்கள் வழியாக, தலா 87,000 கோடி ரூபாய் கடன் பெற்றிருந்தது. இந்த ஆண்டு இதுவரை, 53,000 கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு, கடன் பத்திரங்கள் வழியாக, மேலும் 37,000 ரூபாய் கடன் பெற திட்டமிடப்பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கி அறிக்கையின்படி, நடப்பாண்டு முடிவில், தமிழக அரசின் மொத்த கடன் 8.34 லட்சம் கோடி ரூபாயில், 6 லட்சம் கோடி ரூபாய் கடன் பத்திரங்கள் வழியே பெறப்பட்டதாக இருக்கும்.

கடந்த 2023 மார்ச் முடிவில், கடன் பத்திரங்கள் வழியாக பெறப்பட்ட கடன், 5.18 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. மகளிர் உரிமைத் தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டதால், கூடுதல் கடன் பெற வேண்டிய நிலை அரசுக்கு ஏற்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com