வணிகம்

சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரனின் விலை ஒரு லட்சம் ரூபாயைக் கடந்து புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
இன்று காலை சவரனுக்கு ரூ.720 உயர்ந்த நிலையில், பிற்பகலில் மீண்டும் ரூ. 440 அதிகரித்துள்ளது. ஒரு கிராம் ரூ. 12,515-க்கும், ஒரு சவரன் ரூ. 1,00,120-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
புதிய உச்சம் தொட்டுள்ள தங்கத்தின் விலை அடுத்தடுத்த நாள்களிலும் உயரலாம் என கூறப்படுகிறது.