தங்கம்
தங்கம்

புதிய உச்சத்தைத் தொட்ட தங்கத்தின் விலை!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.55,000-ஐக் கடந்து இன்று புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

தங்கத்தின் விலை கடந்த சில வாரங்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சனிக்கிழமை நிலவரப்படி ஒரு கிராம் தங்கம் ரூ.6,850-க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.54,800-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், வாரத்தின் முதல் நாளான இன்று காலை தங்கத்தின் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.400 அதிகரித்து புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

சென்னையில் இன்று காலை நிலவரப்படி, ஒரு கிராம் தங்கம் ரூ.6,900-க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.55,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதற்கிடையே வெள்ளியின் விலையும் கிராமுக்கு ரூ.3.50 அதிகரித்து புதிய உச்சத்தைத் தொட்டது. முதல் முறையாக ரூ.100-ஐக் கடந்துள்ளது.

ஒரு கிராம் வெள்ளி ரூ.101.00-க்கும், ஒரு கிலோ ரூ.1,01,000-க்கும் விற்பனையாகி வருகின்றது.

logo
Andhimazhai
www.andhimazhai.com