அல்டாமவுண்ட்
அல்டாமவுண்ட்

அம்பானி வீட்டருகே நிலம் சதுர அடி என்ன விலை?

இந்தியாவிலேயே அதிக கோடீஸ்வரர்கள் வசிக்கும் நகரம் எது என்று கேட்டால், மும்பை என சொல்லிவிடுவீர்கள்…!

ஆனால், எந்த பகுதியில், நிலம் அதிக விலைக்கு விற்கப்படுகிறது என்று கேட்டால்…?

கொஞ்சம் தலை சொரிவீர்கள் இல்லையா…?

தெரிந்துகொள்ளுங்கள்...

இந்தியாவின் நம்பர் 1 கோடீஸ்வரரான முகேஷ் அம்பானியின் ஆண்டிலியா வீடு உள்ள அல்டாமவுண்ட் சாலைதான், இந்தியாவிலேயே மிக விலை உயர்ந்த இடம் என்பது தெரியவந்துள்ளது.

சமீபத்தில், லியாஸ் ஃபோராஸ் என்ற நிறுவனமும் டைம்ஸ் ஆஃப் இந்தியாவும் இணைந்து நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது.

அதன்படி, இந்தியாவின் மிக விலை உயர்ந்த முதல் பத்து இடங்களின் பட்டியல் இதோ!

அந்த டாப் 10 ஏரியா பின்வருமாறு:

1. அல்டாமவுண்ட் சாலை - மும்பை

முதல் இடத்தில் உள்ள அல்டாமவுண்ட் சாலியில் ஒரு சதுர அடியின் மதிப்பு 1 லட்சத்து 95, ஆயிரத்து 503 ரூபாய் ஆகும். இந்த சாலையில் தான் முகேஷ் அம்பானி, நீத்தா அம்பானி, குமார் மங்கலம் பிர்லா ஆகியோர் வசித்து வருகின்றனர்.

2. வொர்லி - மும்பை

இங்கு, 1 லட்சத்து 72 ஆயிரத்து 210 ரூபாய் ஒரு சதுர அடியின் விலை. பிரபல கிரிக்கெட் வீரரான விராட் கோலி தனது மனைவி அனுஷ்கா சார்மாவுடன் இந்த பகுதியில்தான் உள்ளார்.

3. பிரபாதேவி மும்பை

மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ள பிரபா தேவியில் ஒரு சதுர அடியின் மதிப்பு 1 லட்சத்து 68 ஆயிரத்து 352 ரூபாய் ஆகும்.

இங்கு பாலிவுட் திரை பிரபலங்களான ரன்வீர் சிங் – தீபிகா படுகோன் வீடு உள்ளது.

4. வொர்லி சீ பேஸ் (Worli Seaface) - மும்பை

இங்கு ஒரு சதுர அடியின் மதிப்பு, 1 லட்சத்து 55 ஆயிரத்து 87 ரூபாய். தொழிலதிபர் ஈஷா அம்பானி, நடிகை ஜெனிலியா ஆகியோர் தங்கள் குடும்பத்துடன் இங்குதான் உள்ளனர்.

அல்டாமவுண்ட்
அல்டாமவுண்ட்

5. மலபார் ஹில் - மும்பை

ஒரு சதுர அடி ரூ. 1 லட்சத்து 48 ஆயிரத்து 882 ரூபாய் விற்பனை செய்யப்படுகிறது.

ஆதி கோத்ரேஜ், சஜ்ஜன் ஜிண்டால், ஆனந்த் மகேந்திர போன்ற தொழிலதிபர்களின் கனவு இல்லம் உள்ள இடம்.

6. பாலி ஹில் - மும்பை

1 லட்சத்து 46 ஆயிரத்து 198 ரூபாய் ஒரு சதுர அடியின் மதிப்பு.

சாருக்கான், சல்மான் கான், அமீர் கான், ஜான் ஆப்ரகாம் ஆகிய நால்வரின் வீடும் இங்கு உள்ளது.

7. ஜுஹூ - மும்பை

இங்கு ஒரு சதுர அடியின் மதிப்பு 1 லட்சத்து 39 ஆயிரத்து 784 ரூபாய் ஆகும். அமிதாப் பச்சான், சஞ்சய் லீலா பன்சாலி, அக்‌ஷய் குமார் போன்ற பிரபலங்கள் வசிக்கும் இடம்.

8. ஜோர் பாக் - டெல்லி

1 லட்சத்து 33 ஆயிரத்து 333 சது ஒரு சதுர அடியின் மதிப்பு. இங்கு எஸ்கார்ட் குழுமத்தின் முதலாளிகள் வசித்து வருகின்றனர்.

9. சாணக்கியாபுரி – டெல்லி

 1 லட்சத்து 27 ஆயிரத்து 407 ரூபாய் ஒரு சதுர அடியின் மதிப்பு.

டோரண்ட் பவர் நிறுவனத்தின் பங்களா இங்குதான் உள்ளது.

10. கம்தேவி - மும்பை

இங்கு ஒரு சதுர அடியின் மதிப்பு 1 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் ஆகும். வழக்கறிஞர் சியா மோடி, ஃபிட்னஸ் குரு நவாஸ் மோடி ஆகியோர் இங்கு உள்ளனர்.

இந்தியாவின் பிரபல தொழிலதிபர்களும், திரை நட்சத்திரங்களும் இந்த இடங்களிலேயே இடம் வாங்க ஆசைப்படுவதாக சொல்லப்படுகிறது.

logo
Andhimazhai
www.andhimazhai.com