டிரம்ப் வரி விதிப்பு…ஆட்டம் கண்ட இந்திய பங்குச் சந்தை!

இந்திய பங்குச்சந்தை சரிவு
இந்திய பங்குச்சந்தை சரிவு
Published on

அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பு நாளை முதல் அமலுக்கு வரும் நிலையில், இந்திய பங்குச்சந்தை இன்று கடும் சரிவை கண்டன. இதனால் முதலீட்டாளர்கள் இன்று ஒரே நாளில் சுமார் 6 லட்சம் கோடியை இழந்ததாக கூறப்படுகிறது.

இன்றைய வர்த்தக முடிவில், சென்செக்ஸ் 910.88 புள்ளிகள் அதாவது 1.12% சரிந்து 80,725.03 ஆக நிலைபெற்றது. நிஃப்டி 274.20 புள்ளிகள் அதாவது 1.1% சரிந்து 24,693.55 ஆகக் குறைந்தது.

சந்தையில், சன் பார்மாசூட்டிகல் இண்டஸ்ட்ரீஸ், ஸ்ரீராம் ஃபைனான்ஸ், டாடா ஸ்டீல், டாக்டர். ரெட்டிஸ் லேப்ஸ் மற்றும் கோல் இந்தியா உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் 3% வரை சரிந்தன.

அமெரிக்க அரசு இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது நாளை முதல் கூடுதலாக 25% வரி விதிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால், இந்தியாவின் 86.5 பில்லியன் டாலர் ஏற்றுமதி பாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வரி விதிப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருவதால், இந்திய பங்குச்சந்தைகள் பெரும் சரிவை கண்டன.

டிரம்ப் நிர்வாகத்தின் 50% வரி விதிப்பு இந்தியச் சந்தைக்கு ஒரு பெரிய சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

logo
Andhimazhai
www.andhimazhai.com