டி.வி.எஸ். குடும்பச் சொத்து-தந்தைக்கு நோட்டீஸ் அனுப்பிய மகள்!

டி.வி.எஸ். குடும்பச் சொத்துகளை பிரிக்கக் கோரி வேணுவுக்கு மகள் லட்சுமி வேணு கடிதம்
டி.வி.எஸ். குடும்பச் சொத்துகளை பிரிக்கக் கோரி வேணுவுக்கு மகள் லட்சுமி வேணு கடிதம்
Published on: 

டி.வி.எஸ். நிறுவனத்தைச் சேர்ந்த வேணு சீனிவாசனிடம், அவரின் மகள் லட்சுமி வேணு முறைப்படி சொத்துக்களை பிரித்துத் தரக் கோரியுள்ளார்.

சட்டப்பூர்வமான, நியாயமான முறையில் கூட்டுக் குடும்பச் சொத்துக்களை பிரித்துத் தரும்படி வேணு சீனிவாசனுக்கு, லட்சுமி வேணு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

கடந்த 2005ஆம் ஆண்டு திருத்தப்பட்ட இந்து வாரிசுரிமைச் சட்டம்,1956-ன்படி, கூட்டுக் குடும்பச் சொத்தில் தனக்குச் சம உரிமை உள்ளதாகவும், டி.வி.எஸ். டிரஸ்ட், பிற நிறுவனங்களின் மூலமாக நிர்வகிக்கப்படும் டி.வி.எஸ். ஹோல்டிங்ஸ், டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி, டி.வி.எஸ். கிரெடிட் சர்வீசஸ், சுந்தரம் கிளேட்டன் உட்பட்ட சொத்துகளில் தனது பங்கினை முறைப்படி பிரித்துத் தருமாறு லட்சுமி வேணு நோட்டீஸில் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2020ஆம் ஆண்டு, டி.வி.எஸ். குடும்ப ஏற்பாட்டின்கீழ் தனது சகோதரர் சுதர்சன் வேணுவுக்கு ஆதரவாக சொத்துக்கள் கொடுக்கப்பட்டிருப்பது சட்டத்திற்கும், நம்பிக்கைக்குமான துரோகம் என்று அவர் கூறியுள்ளார்.

மேலும், டிராக்டர்ஸ் - பார்ம் எக்யூப்மென்ட் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர், நிர்வாக இயக்குநர் மல்லிகா சீனிவாசன், தனது மகளின் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்ததுடன், மகன், மகள் இருவருமே சமம் என்றும் வெளிப்படையான பேச்சுவார்த்தைகள் மூலமாக சுமூகமான தீர்வை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram