இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் பங்குகளை வாங்கும் அல்ட்ராடெக்!

அல்ட்ராடெக்
அல்ட்ராடெக்
Published on

அல்ட்ராடெக் சிமெண்ட் நிறுவனம், இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் 23 சதவீத பங்குகளை வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தைக் கைப்பற்ற அதானி குழுமம் பல முறை முயற்சி செய்தும் தோல்வி அடைந்த நிலையில், தற்போது நீண்ட கால பேச்சுவார்த்தைக்குப் பின்பு இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவன பங்குகளை அல்ட்ராடெக் சிமெண்ட் நிறுவனம் கைப்பற்றுவதற்கு அதன் நிர்வாக குழு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த பங்கு கைப்பற்றல் மூலம் கட்டுமானத்துறையில் பெரும் மாற்றம் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அல்ட்ராடெக் சிமெண்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்கள் குழு, இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் 7.06 கோடி பங்குகளை வாங்குவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஒப்புதல் மூலம் ஒரு பங்கை 267 ரூபாய் விலையில் அல்ட்ராடெக் சிமெண்ட் நிறுவனம் வாங்க உள்ளது. இதன் மூலம் இந்த ஒப்பந்தத்தின் மொத்த மதிப்பு சுமார் 1,885 கோடி ரூபாய் எனத் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த 1,885 கோடி ரூபாய் ஒப்பந்தம் மூலம் அல்ட்ராடெக் சிமெண்ட் நிறுவனம், இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தில் சுமார் 23% அளவிற்கு பங்குகளை பெற உள்ளது. இந்த பங்கு கைப்பற்றும் பணிகள் ஒரு மாத காலத்திற்குள் முடிவடைவதற்கான வாய்ப்பு உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com