வயாகாம்
வயாகாம்

டிஸ்னி ஸ்டாரில் அம்பானி ரூ.11,500 கோடி - ஒரே குடையின் கீழ் ஹாட்ஸ்டார் + ஜியோசினிமா!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் தொழிற்சாலைகள் குழுமம் வால்ட் டிஸ்னி குழுமத்தின் ஸ்டார் ஊடகத்தில் 11,500 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது.

ஸ்டார் இந்தியாவை வால்ட் டிஸ்னி நிறுவனம் வேறு தரப்புக்குக் கைமாற்றுவதாக மாதக் கணக்கில் செய்திகள் வந்தவண்ணம் இருந்தன. தமிழ்நாட்டின் சன் குழுமமும் இதில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில், வால்ட் டிஸ்னியின் இந்தியப் பிரிவான ஸ்டார் இந்தியாவுடன், ரிலையன்ஸ் குழுமத்தின் வயாகாம்18 -ஐ இணைக்க நேற்று உடன்பாடு எட்டப்பட்டது.

இரு நிறுவனங்களும் இணைந்த கூட்டுநிறுவனத்தில் ரிலையன்சின் பங்கு 63 சதவீதமாக இருக்கும். ரிலையன்ஸ் தரப்புதான் மொத்த நிறுவனத்தையும் கட்டுப்படுத்தும்.

முகேஷ் அம்பானியின் மனைவி நிதா அம்பானி இதன் தலைவராகவும், வயாகாமில் முதலீட்டாளரான உதய்சங்கர் துணைத்தலைவராகவும் செயல்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது, வயாகாமுக்கு கலர்ஸ், ஸ்போர்ட்ஸ்18 உட்பட 40 தொலைக்காட்சி சேனல்களும், ஸ்டார் இந்தியாவுக்கு ஸ்டார் பிளஸ், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் உட்பட 80 சேனல்களும் உள்ளன.

இவற்றுடன், ஹாட்ஸ்டாரும் ஜியோசினிமாவும் ஒரே குடையின் கீழ் வந்துவிடும்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com