முருகப்பா குழும அருணாச்சலம் வெள்ளையன் மறைவு!

அருணாச்சலம் வெள்ளையன், முருகப்பா குழுமம்
அருணாச்சலம் வெள்ளையன், முருகப்பா குழுமம்
Published on

சுமார் 90 ஆயிரம் கோடி மதிப்புள்ள முருகப்பா குழுமத்தின் முன்னையதலைவரும் கோரமண்டல் சர்வதேச நிறுவனத்தின் சிறப்புத் தலைவருமான அருணாச்சலம் வெள்ளையன் காலமானார். அவருக்கு வயது 72. 

நீண்ட காலமாக உடலநலம் குன்றியிருந்த அவர், சென்னையில் நேற்று இயற்கை எய்தினார். 

மறைந்த அருணாச்சலம், டூன் பள்ளியிலும், புதுதில்லி வணிகவியல் கல்லூரியிலும் பின்னர் பிரிட்டனில்ஆஸ்டன் பல்கலைக்கழகம், வார்விக் வணிகவியல் பள்ளியிலும் படித்தார். 

முருகப்பா குழுமத்தின் இயக்குநர் குழுத் தலைவராக மட்டுமின்றி, கனோரியா கெமிக்கல் நிறுவனம், எக்சிம் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆகியவற்றின் இயக்குநர் குழுக்களிலும் பணியாற்றியுள்ளார். 

தென்னிந்திய வர்த்தக சபை, இந்திய உர உற்பத்தியாளர் அமைப்பு, இந்திய சர்க்கரை உற்பத்தி ஆலை அதிபர்கள் அமைப்பு ஆகியவற்றிலும் தலைமைப் பதவிகளில் இருந்துள்ளார், அருணாச்சலம். 

வர்த்தக, தொழில் அமைப்புகளில் மட்டும் அல்லாமல், கேரள மாநிலம், கோழிக்கோட்டில் ஐஐஎம் தலைவராகவும் அருணாச்சலம் வெள்ளையன் செயல்பட்டது, குறிப்பிடத்தக்கது. 

இவரின் மறைவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் உட்பட பல்வேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.  

logo
Andhimazhai
www.andhimazhai.com