வணிகம்
தீபாவளி பண்டிகை காலத்தை முன்னிட்டு தங்கம், வெள்ளியின் விலை உயர உயரப் போய்க்கொண்டே இருக்கிறது.
இம்மாதம் 20 ஆம் தேதி தீபாவளி கொண்டாடப்பட உள்ள நிலையில், தங்க, வெள்ளி நகைகளை வாங்குவது கூடிக்கொண்டே போகிறது.
ஏறுமுகத்திலேயே இருந்துவரும் அணிகலன் தங்கம் இன்று ஒரு கிராமுக்கு 175 ரூபாய் அளவுக்கு விலை உயர்ந்தது. மீண்டும் மாலையில் தங்கத்தின் விலை அதிகரித்தது. அதாவது, ஒரு சவரன் தங்கத்தின் விலை காலையில் 880 ரூபாய்க்கு அதிகரித்த நிலையில், மாலையில் 520 ரூபாய்க்கு மீண்டும் கூடியது.
மாலையில் சவரன் அணிகலன் தங்கத்தின் விலை 89 ஆயிரம் ரூபாயை எட்டியது.