விழுப்புரத்தில் மினி டைடல் பூங்கா திறப்பு!

விழுப்புரம், திருச்சிற்றம்பலத்தில் மினி டைடல் பூங்கா திறப்பு
விழுப்புரம், திருச்சிற்றம்பலத்தில் மினி டைடல் பூங்கா திறப்பு
Published on

விழுப்புரம் மாவட்டத்தில்தமிழ்நாடு அரசின் சார்பில் சிறிய அளவிலான தகவல் தொழில்நுட்பப் பூங்கா இன்று திறந்துவைக்கப்பட்டுள்ளது. 

தொழில் துறை சார்பில் டைடல் நியோ நிறுவனத்தின் மூலமாக, விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் 31 கோடி ரூபாயில் தரைத்தளம்+ நான்கு மாடிகளுடன் கூடிய சிறு தகவல்நுட்பப் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச்செயலகத்திலிருந்து இன்று காலை இதை காணொலிக்காட்சி மூலம் திறந்துவைத்தார்.  

தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, செயலாளர் அருண் ராய் உட்பட்ட பலரும் உடனிருந்தனர்.

இந்தப் பூங்காவில் 500 தகவல்நுட்பப் பணியாளர்கள் பணியாற்றமுடியும் என அரசுச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com