நீதிபதி வீட்டில் தீ விபத்து… கட்டுக்கட்டாகப் பிடிபட்ட பணம்… கொலிஜியம் அதிரடி நடவடிக்கை!

நீதிபதி யஷ்வந்த் வர்மா
நீதிபதி யஷ்வந்த் வர்மா
Published on

டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் தீவிபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தபோது நீதிபதியின் வீட்டில் இருந்து கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில் உச்சநீதிமன்றத்தின் கொலிஜியம் அதிரடியான உத்தரவை பிறப்பித்துள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்தவர் யஷ்வந்த் வர்மா. இவர் கடந்த 2021 அக்டோபர் மாதத்தில் டெல்லி உயர்நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யப்பட்டார்.

இந்தநிலையில், நீதிபதி ய்ஷ்வந்த் வர்மா வீட்டில் இல்லாதபோது, இவரது வீட்டில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால், தீயை அணைப்பதற்காக அவரது குடும்பத்தினர் தீயணைப்பு வீரர்களுக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். அவர்களும் விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். அப்போது ஒரு அறையில் கட்டுக்கட்டாக பணம் இருந்ததை கண்டுபிடித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் காவல் துறை உயர் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்க, அது அரசின் உயர் அதிகாரிகளின் கவனத்துக்குச் சென்றுள்ளது. இதை அவர்கள் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னாவுக்கு தகவல் தெரிவிக்க, அவர் உச்சநீதிமன்ற கொலிஜியம் கூட்டத்தைக் கூட்டினார். இதைத்தொடர்ந்து, யஷ்வந்த் வர்மா அலகாபாத் உயர்நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யப்பட்டார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com