பாகிஸ்தானுடனான போர் பதற்றம் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்ட 32 விமான நிலையங்களையும் திறக்க இந்திய விமான நிலைய ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இந்தியா – பாகிஸ்தான் இடையேயான மோதல் எதிரொலியாக, மே 15ஆம் தேதி வரை 32 விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்படுவதாக இந்திய விமான நிலைய ஆணையம் அறிவித்திருந்தது.
இதைத் தொடர்ந்து, இருநாடுகளுக்கு இடையேயான மோதல் கடந்த 10ஆம் தேதியுடன் முடிவுக்கு வந்தாலும், மூடப்பட்ட விமான நிலையங்கள் எப்போது திறக்கப்படும் என்ற எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
இந்த நிலையில், மூடப்பட்ட 32 விமான நிலையங்களையும் திறக்க இன்று காலை உத்தரவிடப்பட்டுள்ளது.
தங்கள் விமானத்தின் நிலையை சரிபார்க்க விமான நிறுவனங்களுடன் தொடர்பு கொள்ளுமாறும், வழக்கமான புதுப்பிப்புகளுக்கு விமான நிறுவனங்களின் வலைத்தளங்களைக் கண்காணிக்கவும் பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.