புதிய வருமான வரி மசோதாவை திரும்பப் பெற மத்திய அரசு முடிவு!

புதிய வருமான வரி மசோதாவை திரும்பப் பெற மத்திய அரசு முடிவு!
Published on

கடந்த பிப்ரவரி மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட புதிய வருமான வரி மசோதாவை திரும்பப் பெற மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

தில்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் மசோதா திரும்பப் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்ட அன்று தேர்வுக்குழு பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது.

பைஜெயந்த் பாண்டா தலைமையிலான தேர்வுக் குழு பல்வேறு பரிந்துரைகளை அளித்திருந்த நிலையில், அந்த பரிந்துரைகளைக் கொண்டு புதிய திருத்தப்பட்ட வருமான வரி மசோதாவை மத்திய அரசு தயார் செய்துள்ளது. இந்த புதிய திருத்தப்பட்ட வருமான வரி மசோதாவை ஆகஸ்ட் 11ஆம் தேதி தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டமிட்டுள்ளது.

1961 ஆம் ஆண்டின் வருமான வரிச் சட்டத்திற்குப் பதிலாக புதிய மசோதாவை அறிமுகப்படுத்தியது. வரி செலுத்தும் முறையை எளிமையாக்கவே இந்த முறையைக் கொண்டு வருவதாக மத்திய அரசு அப்போது கூறியிருந்தது.

logo
Andhimazhai
www.andhimazhai.com