16 யூடியூப் சேனல்கள் முடக்கம்... பிபிசி-க்கு எச்சரிக்கை! - பின்னணி என்ன?

16 யூடியூப் சேனல்கள் முடக்கம்... பிபிசி-க்கு எச்சரிக்கை! - பின்னணி என்ன?
Published on

பெகல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தானின் 16 யூடியூப் சேனல்களை முடக்கம் செய்து மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

காஷ்மீரின் பெல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில், பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

ஏற்கெனவே பாகிஸ்தான் அரசின் எக்ஸ் தளம் இந்தியாவில் முடக்கப்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தானை சேர்ந்தவர்களால் நடத்தப்படும் 16 யூடியூப் சேனல்களும் முடக்கப்பட்டுள்ளன.

இந்தியாவுக்கு எதிரானவெறுப்பை விதைக்கூடிய, மத உணர்வைத் தூண்டக்கூடிய உள்ளடக்கத்துக்காவும் தவறான தகவலை பரப்பியதற்காகவும் டான் நியூஸ், சமா டிவி, ஆரி நியூஸ், ஜியோ நியூஸ் உட்பட 16 யூடியூப் சேனல்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரையின்படி மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

மேலும், பயங்கரவாதிகளை போராளிகள் என்று எழுதிய பிபிசிக்கும் மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

logo
Andhimazhai
www.andhimazhai.com