பள்ளம் இருப்பதைக் கண்டு உஷாராகிய சந்திரயான் ரோவர்!
நிலவின் மேற்பரப்பில் உள்ள பள்ளம்

பள்ளம் இருப்பதைக் கண்டு உஷாராகிய சந்திரயான் ரோவர்!

நிலவின் மேற்பரப்பில் ஆய்வு செய்து வரும் சந்திரயான் விண்கலத்தின் ரோவர், தனக்கு முன்னால் இருந்த பள்ளத்தை உணர்ந்து தனது பாதையை மாற்றி பயணித்து வருவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

நிலவின் தென் துருவ பகுதியை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 விண்கலத்தை இஸ்ரோ கடந்த மாதம் விண்ணில் செலுத்தியது. அது தனது 41 நாள் பயணத்தை வெற்றிகரமாக முடித்து, கடந்த 23ஆம் தேதி விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவின் தென் துருவப் பகுதியில் தரையிறங்கியது. இதனைத் தொடர்ந்து, விக்ரம் லேண்டர் என்னவெல்லாம் செய்கிறது என்பதை இஸ்ரோ வெளியிட்டு வருகிறது.

மாற்றுப் பாதையில் செல்லும் சந்திரயான் ரோவர்
மாற்றுப் பாதையில் செல்லும் சந்திரயான் ரோவர்

இந்நிலையில், நேற்று நிலவின் தென் துருவத்தில் ரோவர் செல்லும் வழியில் 4 மீட்டர் விட்டம் கொண்ட பள்ளம் இருப்பதை 3 மீட்டருக்கு முன்பாகவே கணித்த ரோவர் அதன் பாதையை மாற்றிப் பயணித்துள்ளதாக இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது. இது தொடர்பான புகைப்படங்களையும் இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com