காஷ்மீரில் சென்னை மருத்துவர் படுகாயம்- திருமண நாள் கொண்டாடச் சென்றபோது துயரம்!

காஷ்மீரில் சென்னை மருத்துவர் படுகாயம்- திருமண நாள் கொண்டாடச் சென்றபோது துயரம்!
Published on

காஷ்மீர் பெகல்காம் சுற்றுலாத்தலத்தில் சென்னையைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் படுகாயம் அடைந்துள்ள தகவல் வெளியாகியுள்ளது. 

சென்னை, முகப்பேரை அடுத்த நொளம்பூர் பகுதியில் வசித்துவருபவர், பரமேசுவரன். மருத்துவரான இவர், மீனாட்சி மருத்துவக் கல்லூரியில் பணியாற்றி வருகிறார். இவரின் மனைவி நயன்தாரா அரவிந்த் கண் மருத்துவமனையில் பணியாற்றுகிறார்.

ஓராண்டுக்கு முன்னர் திருமணம் செய்துகொண்ட இந்தத் தம்பதியர், முதலாமாண்டு திருமண நாளைக் கொண்டாட காஷ்மீருக்குச் சுற்றுலா சென்றனர். பெகல்காமில் குட்டி சுவிட்சர்லாந்து பகுதிக்குச் சென்றபோது இவர்களும் பயங்கரவாதத் தாக்குதலில் சிக்கிக்கொண்டனர். நயன்தாராவுக்கு பாதிப்பு எதுவும் இல்லை.

மருத்துவர் பரமேசுவரன் படுகாயம் அடைந்தநிலையில், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. அவரை மேல்சிகிச்சைக்காக தில்லிக்கு அழைத்துச்செல்ல ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இவருடன் தமிழகத்தைச் சேர்ந்த இன்னொருவரையும் கூட்டிச்செல்ல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

logo
Andhimazhai
www.andhimazhai.com