“சென்னை வெறும் ஊரல்ல; தமிழ்நாட்டின் இதயத்துடிப்பு”

CM M.K. Stalin
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
Published on

சென்னை நாள் இன்று கொண்டாடப்படும் நிலையில், சென்னை வெறும் ஊரல்ல; தமிழ்நாட்டின் இதயத்துடிப்பு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

386-ஆவது சென்னை நாளையொட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:

எந்தெந்த மூலைகளில் இருந்தோ நண்பர்களை அளித்து, வாழ வழிதேடுவோருக்கு நம்பிக்கையை அளித்து, பல பெண்களுக்குப் பறக்கச் சிறகுகளை அளித்து, எத்தனையோ பேருக்கு முதல் சம்பளத்தை அளித்து, சொந்த ஊரில் அடையாளத்தை அளித்து.

மொத்தத்தில் நமக்கெல்லாம் வாழ்வளித்த சீரிளம் சென்னைக்கு அகவை 386!

சென்னை வெறும் ஊரல்ல; தமிழ்நாட்டின் இதயத்துடிப்பு! வணக்கம் வாழவைக்கும் சென்னை!” என கூறியுள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com