ராணுவத்துக்கு ஆதரவு தெரிவித்து முதல்வர் பேரணி அறிவிப்பு!

முதல்வர் மு.க.ஸ்டாலின்
முதல்வர் மு.க.ஸ்டாலின்
Published on

இந்திய ராணுவ வீரர்களுக்கு ஆதரவு தெரிவித்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் பேரணி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின் எதிரொலியாக நேற்று இரவு வடக்கு மற்றும் மேற்கு இந்தியாவின் எல்லையோர மாநிலங்களின் 15 நகரங்களில் உள்ள ராணுவத் தளங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை இந்தியா வெற்றிகரமாக முறியடித்தது.

இந்த நிலையில், ராணுவத்துக்கு ஆதரவு தெரிவித்து பேரணி நடைபெறும் என்று முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பில்,

“தீவிரவாதத்தை வளர்த்தெடுத்து, தான் கெட்டதோடு இந்தியாவிலும் அத்துமீறல்களில் ஈடுபடுகிறது பாகிஸ்தான். நம்மைக் காக்க வீரத்துடன் போர் நடத்தும் இந்திய இராணுவத்தினருக்கு நம் ஆதரவை வெளிப்படுத்தும் நேரம் இது.

நாளை மாலை 5 மணிக்கு டிஜிபி அலுவலகத்தில் இருந்து தீவுத்திடல் போர் நினைவுச் சின்னம் வரை, எனது தலைமையில் முன்னாள் படைவீரர்கள், அமைச்சர் பெருமக்கள், பொதுமக்கள், மாணவர்கள் பங்குபெறும் பேரணி நடைபெறும். மக்கள் அனைவரும் பங்கேற்று நம் ஒற்றுமையையும் உறுதியையும் காட்டுவோம்”எனக் குறிப்பிட்டுள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com