நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
Published on

டெல்லியில் மே 24 ஆம் தேதி நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.

மத்திய அரசின் நிதி நிர்வாகம் தொடர்பான நிதி ஆயோக் கூட்டம் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2015இல் திட்டக்குழுவுக்கு மாற்றாக நிதி ஆயோக் உருவாக்கப்பட்டது. நிதி ஆயோக் தலைவராக பிரதமர் இருக்கிறார்.

இந்நிலையில், நடப்பாண்டு நிதி ஆயோக் கூட்டம் மே 24இல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் அனைத்து மாநில முதலமைச்சர்கள், யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநர்கள், முக்கிய பொறுப்புகளை வகிக்கும் மத்திய அமைச்சர்கள் பங்கேற்பார்கள்.

இந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்பார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக அவர் மே 23 ஆம் தேதி இரவு டெல்லி செல்கிறார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Andhimazhai
www.andhimazhai.com