சீனாக்காராங்க எதையெல்லாம் கண்டுபிடுக்கிறாங்க. இப்போ அவங்க கண்டுபிடிச்சிருக்க இயந்திரம்தான் உலக மக்களை ‘அடேங்கப்பா...’ போட வைத்திருக்கிறது.
சீனாவின் சாங்காய் நகரில் உள்ள ஒரு வணிக வளாகத்தில், 30 நிமிடங்களில் தங்கத்தை பணமாக மாற்றும் ஏ.டி.எம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த இயந்திரத்தை கிங் ஹுட் என்ற நிறுவனம் வடிவமைத்துள்ளது.
இந்த, எ.டி.எம். இயந்திரத்தில் நகையை வைத்தால், அதை எடை போட்டு, எவ்வளவு என்பதை திரையில் காட்டும். அதை ஏற்று ஒப்புதல் அளித்தால், தங்கம் உருக்கப்பட்டு, அதற்குரிய பணம், வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு விடுமாம்.
சாங்காய் நகரில் உள்ள வணிக வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள இந்த ஏ.டி.எம்.மில் தங்கள் தங்கத்தை விற்று பணம் பெற மக்கள் காத்து கிடைக்கிறார்களாம்.
ஒருவேளை இந்த இயந்திரம் இந்தியாவுக்கு வந்தால், சேட்டு கடைக்குத்தான் வேட்டு வைக்கும் போல.!