இந்து கடவுள்கள் குறித்து சர்ச்சை கருத்து… வைகோவின் முன்னாள் உதவியாளர் கைது!

அருணகிரி
அருணகிரி
Published on

சமூக ஊடகங்களில் இந்து கடவுள்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்துகளைப் பதிவிட்டு வந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் முன்னாள் உதவியாளர் அருணகிரி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சங்கரன்கோவிலை சேர்ந்த அருணகிரி, சமூக ஊடகங்களில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். வைகோவின் பேச்சுகளை தொகுத்து வெளியிட்டுள்ளார். அதேபோல பல்வேறு நாடுகளுக்கு பயணம் செய்து பயணக் கட்டுரைகளையும் எழுதியவர்.

சமூக ஊடகங்களில் கடவுள் மறுப்பு நாத்திக பிரசாரத்தை தீவிரமாக செய்து வந்தார். இதனால் சங்கரன்கோவில் போலீசில் ராஜா என்பவர், இந்து கடவுள்களை அருணகிரி அவதூறு செய்து பதிவிட்டு வருவதாக புகார் கொடுத்தார். இந்த புகாரின் அடிப்படையில் அருணகிரியிடம் ஏற்கனவே போலீசார் விசாரணை நடத்தினர். இந்த நிலையில் அருணகிரியை நேற்று போலீசார் கைது செய்தனர்.

சமூக ஊடகங்களில் நாத்திக பிரசார கருத்துகளை எழுதியதற்காக அருணகிரி கைது செய்யப்பட்டதற்கு பல்வேறு அமைப்பினர் போலீசாருக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

logo
Andhimazhai
www.andhimazhai.com