பொன்னியின் செல்வன் படத்திலுள்ள ‘வீர ராஜா வீர’ பாடல் தொடர்பான காப்புரிமை விவகாரத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் ரூ. 2 கோடி செலுத்த டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பத்துக்கும் மேற்பட்ட படங்கள் ரிலீஸிற்கு தயாராகி வருகின்றன.
இந்த நிலையில், ஏ.ஆர். ரஹ்மான், பொன்னியின் செல்வன் படக்குழுவினருக்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில் பாடகர் பயாஸ் வாசிபுதீன் தாகர் பதிப்புரிமை மீறல் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கில், ரஹ்மான் "வீர ராஜா வீரா" பாடலில், தாகரின் தாத்தா, தந்தை பாடிய "சிவ ஸ்துதி" பாடலின் சில பகுதிகளைப் பயன்படுத்தியதாக தாகர் குற்றம்சாட்டியிருந்தார்.
இந்நிலையில் 'பொன்னியின் செல்வன்' படத்தில் இடம்பெற்ற 'வீர ராஜா வீரா' பாடல் தொடர்பான காப்புரிமை விவகாரத்தில், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் ரூ. 2 கோடி செலுத்த டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.