இந்தியா முழுவதும் 4,302 பேருக்கு கொரோனா… 24 மணிநேரத்தில் 7 பேர் பலி!

கொரோனா வைரஸ் (மாதிரிப்படம்)
கொரோனா வைரஸ் (மாதிரிப்படம்)
Published on

இந்தியாவில் இதுவரை 4,302 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் கடந்த 24 மணி நேரத்தில் 7 பேர் உயிரிழந்து இருப்பதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் பரவி வருகிறது. குறிப்பாக கேரளா, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், தமிழகம் ஆகிய மாநிலங்களில் அதிகம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டு உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மகாராஷ்டிராவில் 4 பேரும், டெல்லி, தமிழகம், குஜராத்தில் தலா ஒருவரும் என மொத்தம் 7 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல், 276 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் இதுவரை 4,302 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை நாடு முழுவதும் மொத்தம் 44 பேர் உயிரிழந்திருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது: முதியோர், கர்ப்பிணிகள், நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக உள்ளவர்கள் பொது இடங்களுக்குச் செல்லும் போது மாஸ்க் அணிய வேண்டும். கொரோனா பரவலால் பதற்றப்படத் தேவையில்லை. மத்திய அரசு கூறிய அறிவுறுத்தல்களையே நாங்களும் கூறி வருகிறோம், என்றார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com