சீமானுக்கு புதிய பாஸ்போர்ட் வழங்க நீதிமன்றம் உத்தரவு!

NTK Seeman
நாதக சீமான்
Published on

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு 4 வாரங்களில் புதிய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என்று மண்டல பாஸ்போர்ட் அதிகாரிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தன் மீது நிலுவையில் உள்ள வழக்குகளை சுட்டிக்காட்டி, புதிய பாஸ்போர்ட் வழங்க மறுக்கப்பட்ட நிலையில், தனக்கு புதிய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என்றும், தன் மீது அரசியல் காரணங்களுக்காக வழக்குகள் போடப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் சீமான் மனு தாக்கல் செய்திருந்தார்.

இது தொடர்பாக இன்று நடந்த இந்த வழக்கு விசாரணையில், சீமானுக்கு 4 வாரங்களில் புதிய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என்று மண்டல பாஸ்போர்ட் அதிகாரிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com