இயக்குநர் ஷங்கரின் ரூ. 10.11 கோடி சொத்து முடக்கத்துக்கு நீதிமன்றம் தடை!

இயக்குநர் ஷங்கர்
இயக்குநர் ஷங்கர்
Published on

இயக்குநர் ஷங்கரின் ரூ.10.11 கோடி சொத்து முடக்கத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

தமிழ் சினிமாவில் பிரமாண்ட இயக்குநராக வலம் வரும் ஷங்கரின் கடைசி இரண்டு படங்களான 'இந்தியன் 2', 'கேம் சேஞ்சர்' ஆகியவை வசூல் ரீதியில் தோல்வியை தழுவின.

இந்த நிலையில், 'எந்திரன்' படத்தின் கதை காப்புரிமை தொடர்பாக ஷங்கர் மீது அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்தது.

இது தொடர்பான வழக்கு நடந்து வரும் நிலையில், முதற்கட்டமாக ரூ.10.11 கோடி மதிப்பிலான அவரின் 3 சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி நடவடிக்கை எடுத்தது.

இதுதொடர்பாக இயக்குநர் ஷங்கர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

இந்த நிலையில், இந்த வழக்கானது இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.செந்தில்குமார் ஆகியோர், இயக்குநர் ஷங்கரின் ரூ.10.11 கோடி சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறையின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தனர். மேலும், விசாரணையை ஏப்ரல் 21ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர். அதற்குள் அமலாக்கத்துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

logo
Andhimazhai
www.andhimazhai.com