வங்கி கடன்களை விஞ்சும் கிரெடிட் கார்டு கடன்!

வங்கி கடன்களை விஞ்சும் கிரெடிட் கார்டு கடன்!
Published on

கடந்த ஓராண்டில் வங்கிக் கடன்கள் 16 % மட்டுமே உயர்ந்துள்ள நிலையில், கிரெடிட் கார்டு கடன்கள் இருமடங்கு அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

2008ஆம் ஆண்டுக்குப் பிறகு கிரெடிட் கார்டுகளின் கடன் தொகையானது படிப்படியாக உயர்ந்து வருகிறது. அந்தவகையில், கடந்த ஒரே ஆண்டில் கிரெடிட் கார்டு கடன் 30 சதவீதம் அதிகரித்துள்ளது. இதன் மூலம், கிரெடிட் கார்டு கடன் ரூ.2 லட்சம் கோடியைக் கடந்துள்ளதாக ரிசர்வ் வங்கி வெளியிட்ட புள்ளிவிவரத்தின் அடிப்படையில் தெரிய வந்துள்ளது.

சென்ற ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டின் கடன் தொகையானது 29.7% அதிகமாகும். இதில் 1.4 % தனி நபர் கடன், 14.1% வீட்டுக் கடன், 3.7 % வாகன கடன் ஆகும்.

கிரெடிட் கார்டு கடன் தொகை தொடர்பாக ரிசர்வ் வங்கி ஏற்கெனவே தனியார் வங்கிகளுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தாலும், கிரெடிட் கார்டு கடன் தொகையால் எவ்வித ஆபத்தும் இல்லை என கூறியிருக்கிறது. அதேபோல், மக்கள் மத்தியில் கடன் அட்டையைப் பயன்படுத்தி செலவிடும் வழக்கம் அதிகரித்துள்ளதாக தனியார் வங்கிகள் தெரிவிக்கின்றன. மேலும், இந்திய மக்கள் தொகையில் வெறும் 5 சதவீதம் பேர் மட்டுமே கடன் அட்டையைப் பயன்படுத்துகின்றனர் என்ற தகவலும் வெளியாகியிருக்கிறது.

மேலும், கிரெடிட் கார்டு நிலுவைத் தொகை அதிகரித்துள்ளதற்கு பணவீக்கம் ஒரு முக்கிய காரணம் என நிபுணர்கள் கூறுகின்றனர். பணவீக்கமே கிரெடிட் கார்டு கடன்களை ஊக்குவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

logo
Andhimazhai
www.andhimazhai.com