டேவிட்சன் தேவ ஆசீர்வாதம்
டேவிட்சன் தேவ ஆசீர்வாதம்

உளவுத்துறை ஏடிஜிபி டேவிட்சன் தேவ ஆசீர்வாதம் இடமாற்றம்!

உளவுத்துறை ஏடிஜிபி-யாக கடந்த 2021ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வந்த டேவிட்சன் தேவ ஆசீர்வாதம், தலைமையிட ஏடிஜிபியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் அரசுத் துறை அதிகாரிகள் அவ்வபோது இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். இது தொடர்பாக உள்துறை செயலாளர் அமுதா வெளியிட்டுள்ள அறிக்கையில், உளவுத் துறை ஏடிஜிபி டேவிட்சன் தேவ ஆசீர்வாதம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக, உளவுத் துறை புதிய ஏடிஜிபி பொறுப்பைக் கூடுதலாக செந்தில் வேலன் கவனிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல்,ஆவடி கமிஷ்னர் அருண், சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி-யாக இருந்த சங்கர் ஆவடி காவல் ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com